வீட்டு வேலையில் ஈடுபட்ட முதியவர் ஒருவர் ஏணியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது வீட்டின் கூரையை ஏணியில் ஏறி சுத்தம் செய்ய முயற்சித்த 83 வயதுடைய முதியவர் ஏணியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
தலை, இடுப்புப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டு வேலையில் ஈடுபட்ட முதியவர் பரிதாப மரணம். வீட்டு வேலையில் ஈடுபட்ட முதியவர் ஒருவர் ஏணியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தனது வீட்டின் கூரையை ஏணியில் ஏறி சுத்தம் செய்ய முயற்சித்த 83 வயதுடைய முதியவர் ஏணியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.தலை, இடுப்புப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார்.இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.