யாழ்ப்பாணம் - பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கி வருவதாக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் அம்மாச்சி உணவகம் பரிசோதிக்கப்பட்டது.
இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி சுகாதார சீர் கேட்டுடன் உணவகம் இயங்கி வருகின்றமை அவதானிக்கப்பட்டது.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, உணவகத்தின் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்வரை உணவகம் இன்று 21.05.2026 தொடக்கம் மூடப்பட்டது.
அத்துடன் அம்மாச்சி உணவக உணவு கையாள்வோருக்கான விழிப்பணர்வு செயற்பாடும் இன்றையதினம் 21.05.2026 பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய அம்மாச்சி உணவகம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை யாழ்ப்பாணம் - பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கி வருவதாக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது.இதனை தொடர்ந்து நேற்றைய தினம் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் அம்மாச்சி உணவகம் பரிசோதிக்கப்பட்டது.இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி சுகாதார சீர் கேட்டுடன் உணவகம் இயங்கி வருகின்றமை அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, உணவகத்தின் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்வரை உணவகம் இன்று 21.05.2026 தொடக்கம் மூடப்பட்டது. அத்துடன் அம்மாச்சி உணவக உணவு கையாள்வோருக்கான விழிப்பணர்வு செயற்பாடும் இன்றையதினம் 21.05.2026 பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் முன்னெடுக்கப்பட்டது.