• Sep 13 2025

அமெரிக்காவின் உயர்ந்த விருது சார்லிக்கு! ட்ரம்ப் அறிவிப்பு

Chithra / Sep 12th 2025, 8:24 am
image

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது.

இதனை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார். 

சார்லி கிர்க் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப், 

கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என காட்டமாக தெரிவித்துள்ளார். 

அத்தோடு அமெரிக்க இளைஞர்களின் மனதை சார்லியைவிட மிகச் சிறப்பாக புரிந்து கொண்டவர்கள் எவரும் இருக்க இயலாது. அவரை அனைவரும் நேசித்தனர். குறிப்பாக என்னால் அதிகமாக நேசிக்கப்பட்டவர்.  என்று வேதனையைப் பகிர்ந்துள்ளார். 

இந்நிலையில், சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

31 வயதான சார்லி கிர்க் அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர். இவர் பழமைவாத சிந்தனையாளர். அமெரிக்காவின் முக்கிய வலதுசாரி அரசியல் பிரமுகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். எழுத்தாளர், பேச்சாளர், வர்ணனையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். சில காலம் தேசிய கொள்கைக்கான கவுன்சிலிங் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

சார்லிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையே நீண்ட நட்பு உள்ளது. 2016 முதல் இந்த நட்பு மிகவும் வலுவானது. 

2024 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ‘மீண்டும் அமெரிக்காவை வலிமையானதாக மாற்றுவோம் (Make America Great Again - MAGA) என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க ட்ரம்ப்புக்கு தூண்டுகோலாக இருந்தார் சார்லி. சர்வசாதாரணமாக வெள்ளை மாளிக்கைக்குச் சென்று ட்ரம்ப்பை சந்திக்கக் கூடியவர்.

சார்லி கிர்க், கருக்கலைப்புக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தவர். 

அதேபோல் சார்லி கிர்க் துப்பாக்கி கலாச்சாரத்தையும் ஆதரித்துப் பேசியிருக்கிறார். சில துப்பாக்கி வன்முறைகள் சரியே என்று கூறியிருக்கிறார்.

அப்படிப் பேசிய சார்லி கிர்க்கும் துப்பாக்கிச் சூட்டுக்கே பலியாகியிருக்கிறார். 

சார்லி 2021-ல், எரிகா ஃப்ராட்ஸ்வே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

அமெரிக்காவின் உயர்ந்த விருது சார்லிக்கு ட்ரம்ப் அறிவிப்பு  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது.இதனை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார். சார்லி கிர்க் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப், கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என காட்டமாக தெரிவித்துள்ளார். அத்தோடு அமெரிக்க இளைஞர்களின் மனதை சார்லியைவிட மிகச் சிறப்பாக புரிந்து கொண்டவர்கள் எவரும் இருக்க இயலாது. அவரை அனைவரும் நேசித்தனர். குறிப்பாக என்னால் அதிகமாக நேசிக்கப்பட்டவர்.  என்று வேதனையைப் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.31 வயதான சார்லி கிர்க் அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர். இவர் பழமைவாத சிந்தனையாளர். அமெரிக்காவின் முக்கிய வலதுசாரி அரசியல் பிரமுகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். எழுத்தாளர், பேச்சாளர், வர்ணனையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். சில காலம் தேசிய கொள்கைக்கான கவுன்சிலிங் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.சார்லிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையே நீண்ட நட்பு உள்ளது. 2016 முதல் இந்த நட்பு மிகவும் வலுவானது. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ‘மீண்டும் அமெரிக்காவை வலிமையானதாக மாற்றுவோம் (Make America Great Again - MAGA) என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க ட்ரம்ப்புக்கு தூண்டுகோலாக இருந்தார் சார்லி. சர்வசாதாரணமாக வெள்ளை மாளிக்கைக்குச் சென்று ட்ரம்ப்பை சந்திக்கக் கூடியவர்.சார்லி கிர்க், கருக்கலைப்புக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தவர். அதேபோல் சார்லி கிர்க் துப்பாக்கி கலாச்சாரத்தையும் ஆதரித்துப் பேசியிருக்கிறார். சில துப்பாக்கி வன்முறைகள் சரியே என்று கூறியிருக்கிறார்.அப்படிப் பேசிய சார்லி கிர்க்கும் துப்பாக்கிச் சூட்டுக்கே பலியாகியிருக்கிறார். சார்லி 2021-ல், எரிகா ஃப்ராட்ஸ்வே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement