போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க பெண் பொலிஸார் ஒருவர் ஓடி ஓடிச் சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
கேரளா திருச்சூர் நகர மகளிர் பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் அதிகாரி அபர்ணா குமார் என்பவரே இவ்வாறு தனது கடமையை புரிந்துள்ளார்.
கேரளா- திருச்சூர் நகர சாலையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பேருந்து, கார், ஹயேஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நெரிசலில் சென்றுள்ளது.
குறித்த சாலையில் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.
அம்புலன்ஸ் வண்டி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதை குறித்த பெண் பொலிஸ் அதிகாரி அவதானித்தார்.
உடனே அவர் சாலையில் வேகமாக ஓடிச் சென்று வாகனங்களை தட்டித் தட்டி ஒதுக்கிவிட்டு அம்புலன்ஸ் வண்டி செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதன்பின்னர் அம்புலன்ஸ் வண்டி நெரிசல் இல்லாமல் வேகமாகச் சென்றது. குறித்த பெண் பொலிஸ் அதிகாரியின் செயல் காணொளியாக வெளிவந்து நெகழ்ச்சியடைய வைத்துள்ளது.
பெண் பொலிஸ் அதிகாரியின் செயலை அறிந்த உயர் அதிகாரிகள் பலர் அவரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில் குறித்த பெண் பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில், பொலிஸ் கடமை புரிவது மிகவும் நேர்மையான செயலாகும். அதனை உணர்வுபூர்வமாக செய்ய வேண்டும். சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட அம்புலன்ஸ் வண்டிக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பது எனது கடமையாகும். நான் அதனை மகிழ்ச்சியுடனே செய்தேன் - என்று நெகிழ்ச்சியுடன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்தில் சிக்கிய அம்புலன்ஸ்; ஓடிச்சென்று வழி ஏற்படுத்தி கொடுத்த பெண் பொலிஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க பெண் பொலிஸார் ஒருவர் ஓடி ஓடிச் சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. கேரளா திருச்சூர் நகர மகளிர் பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் அதிகாரி அபர்ணா குமார் என்பவரே இவ்வாறு தனது கடமையை புரிந்துள்ளார்.கேரளா- திருச்சூர் நகர சாலையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பேருந்து, கார், ஹயேஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நெரிசலில் சென்றுள்ளது. குறித்த சாலையில் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. அம்புலன்ஸ் வண்டி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதை குறித்த பெண் பொலிஸ் அதிகாரி அவதானித்தார். உடனே அவர் சாலையில் வேகமாக ஓடிச் சென்று வாகனங்களை தட்டித் தட்டி ஒதுக்கிவிட்டு அம்புலன்ஸ் வண்டி செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். அதன்பின்னர் அம்புலன்ஸ் வண்டி நெரிசல் இல்லாமல் வேகமாகச் சென்றது. குறித்த பெண் பொலிஸ் அதிகாரியின் செயல் காணொளியாக வெளிவந்து நெகழ்ச்சியடைய வைத்துள்ளது. பெண் பொலிஸ் அதிகாரியின் செயலை அறிந்த உயர் அதிகாரிகள் பலர் அவரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில் குறித்த பெண் பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில், பொலிஸ் கடமை புரிவது மிகவும் நேர்மையான செயலாகும். அதனை உணர்வுபூர்வமாக செய்ய வேண்டும். சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட அம்புலன்ஸ் வண்டிக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பது எனது கடமையாகும். நான் அதனை மகிழ்ச்சியுடனே செய்தேன் - என்று நெகிழ்ச்சியுடன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.