• May 24 2026

இந்திய பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த அம்பானி; முதன்முறையாக ஷாருக்கானும் பட்டியலில் இடம்பிடிப்பு!

shanu / Oct 2nd 2025, 1:40 pm
image

2025ஆம் ஆண்டின் ஹுருன் அமைப்பின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதேவேளை குறித்த பட்டியலில் முதன்மறையாக பிரபல பொலிவுட் நடிகர் ஷாருக்கானும் இடம்பிடித்துள்ளார். 


எம் 3 எம் ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் 9.55 லட்சம் கோடி ரூபா  நிகரமதிப்புடன் இந்தியாவின் முதல் பணக்கார குடும்பமாக இடம்பிடித்துள்ளனர். 


அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் 8.15 லட்சம் கோடி ரூபா மதிப்புடன் 2ஆவது இடத்தில் உள்ளனர். 


இதற்கிடையில், HCL டெக்னாலஜிஸின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா,  2.84 லட்சம் கோடி ரூபா சொத்து மதிப்புடன் முதல்முறையாக முதல் 3 இடங்களுக்குள் நுழைந்ததன் மூலம் இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


இதே பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் முதன்முறையாக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவர், 12,490 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.


அவருக்கு அடுத்ததாக ஜூஹி சாவ்லா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 7,790 கோடியாக உள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் ஹிருத்திக் ரோஷன் சொத்து மதிப்பு 2,160 கோடி ரூபாவாகும். 


பாலிவுட் பிரபலங்களின் பணக்காரர்கள் பட்டியலில் 1,880 கோடி ரூபா  சொத்துடன் கரண் ஜோஹார் 4 ஆம் இடமும், 1,630 கோடி ரூபா  சொத்து மதிப்புடன் அமிதாப் 5ஆவது இடமும் வகிக்கின்றனர். 


மேலும், பெர்ப்ளெக்ஸிட்டியின் நிறுவனரான முப்பத்தொரு வயது அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ரூ.21,900 கோடி நிகர மதிப்புடன் இந்தியாவின் இளைய பில்லியனர் ஆனார்.

இந்திய பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த அம்பானி; முதன்முறையாக ஷாருக்கானும் பட்டியலில் இடம்பிடிப்பு 2025ஆம் ஆண்டின் ஹுருன் அமைப்பின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதேவேளை குறித்த பட்டியலில் முதன்மறையாக பிரபல பொலிவுட் நடிகர் ஷாருக்கானும் இடம்பிடித்துள்ளார். எம் 3 எம் ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் 9.55 லட்சம் கோடி ரூபா  நிகரமதிப்புடன் இந்தியாவின் முதல் பணக்கார குடும்பமாக இடம்பிடித்துள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் 8.15 லட்சம் கோடி ரூபா மதிப்புடன் 2ஆவது இடத்தில் உள்ளனர். இதற்கிடையில், HCL டெக்னாலஜிஸின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா,  2.84 லட்சம் கோடி ரூபா சொத்து மதிப்புடன் முதல்முறையாக முதல் 3 இடங்களுக்குள் நுழைந்ததன் மூலம் இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் முதன்முறையாக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவர், 12,490 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.அவருக்கு அடுத்ததாக ஜூஹி சாவ்லா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 7,790 கோடியாக உள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் ஹிருத்திக் ரோஷன் சொத்து மதிப்பு 2,160 கோடி ரூபாவாகும். பாலிவுட் பிரபலங்களின் பணக்காரர்கள் பட்டியலில் 1,880 கோடி ரூபா  சொத்துடன் கரண் ஜோஹார் 4 ஆம் இடமும், 1,630 கோடி ரூபா  சொத்து மதிப்புடன் அமிதாப் 5ஆவது இடமும் வகிக்கின்றனர். மேலும், பெர்ப்ளெக்ஸிட்டியின் நிறுவனரான முப்பத்தொரு வயது அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ரூ.21,900 கோடி நிகர மதிப்புடன் இந்தியாவின் இளைய பில்லியனர் ஆனார்.

Advertisement

Advertisement

Advertisement