• Sep 27 2026

ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் பறக்கும் விமானம் - யாழ். மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Chithra / Sep 26th 2026, 12:54 pm
image


திருச்சி – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.


இதன்படி, இரு நகரங்களுக்கும் இடையிலான விமானங்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படவுள்ளன.


செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.


திருச்சியில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 1.50 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.


அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 3.25 மணிக்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விமான சேவை, சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் பறக்கும் விமானம் - யாழ். மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி திருச்சி – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி, இரு நகரங்களுக்கும் இடையிலான விமானங்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படவுள்ளன.செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.திருச்சியில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 1.50 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 3.25 மணிக்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விமான சேவை, சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement