கடந்த 203 ஆண்டுகளாக நிரந்தர முகவரியின்றி வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியை பெற்று கொடுக்க பிரிடோவின் புதிய முயற்சி.
அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அக்கரப்பத்தனை பிரதேசத்தில் தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மலையகப் பகுதிகளில் சுமார் 203 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்கள், இன்றளவும் நிரந்தர முகவரி இல்லாத காரணத்தினால் பல்வேறு அடிப்படை உரிமைகள் மற்றும் அரச சேவைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரிடோ (PREDO) நிறுவனத்தின் ஏற்பாட்டில் அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அக்கரப்பத்தனை பிரதேசத்தில் உள்ள பல்வேறு தோட்டங்களில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக கிளாஸ்கோ கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மக்களுக்கு நிரந்தர முகவரியின் அவசியம் மற்றும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் தொடர்பான தெளிவூட்டல் கூட்டம் நேற்று 30 ம் திகதி நடைபெற்றது.
முன்பள்ளி ஆசிரியை குமுதினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இணைப்பாளர் புஷ்பராஜ் மற்றும் தபால் நிலைய உத்தியோகத்தர் திரு. சீலன் ஆகியோர் கலந்துகொண்டு, நிரந்தர முகவரி பெறுவதன் முக்கியத்துவம், அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டினர்.
இதன்போது, தோட்ட மக்களின் நிரந்தர முகவரி தொடர்பான பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக மக்கள் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
நீண்ட காலமாக முகவரியற்ற நிலையில் வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களுக்கு அடையாளத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தும் முக்கியமான முயற்சியாக இத்திட்டம் பார்க்கப்படுகின்றது.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மிக விரைவில் தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரிகள் வழங்கப்பட்டு, அவை பிரதேச செயலகத்திற்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
203 ஆண்டுகால வாழ்வுக்கு பின்னரும் முகவரியற்றவர்களாக இருக்க வேண்டிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, பெருந்தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.
203 ஆண்டுகளுக்கு பின்னர் பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரி பிரிடோவின் புதிய முயற்சி கடந்த 203 ஆண்டுகளாக நிரந்தர முகவரியின்றி வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியை பெற்று கொடுக்க பிரிடோவின் புதிய முயற்சி.அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அக்கரப்பத்தனை பிரதேசத்தில் தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மலையகப் பகுதிகளில் சுமார் 203 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்கள், இன்றளவும் நிரந்தர முகவரி இல்லாத காரணத்தினால் பல்வேறு அடிப்படை உரிமைகள் மற்றும் அரச சேவைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரிடோ (PREDO) நிறுவனத்தின் ஏற்பாட்டில் அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அக்கரப்பத்தனை பிரதேசத்தில் உள்ள பல்வேறு தோட்டங்களில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அதன் ஒரு கட்டமாக கிளாஸ்கோ கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மக்களுக்கு நிரந்தர முகவரியின் அவசியம் மற்றும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் தொடர்பான தெளிவூட்டல் கூட்டம் நேற்று 30 ம் திகதி நடைபெற்றது.முன்பள்ளி ஆசிரியை குமுதினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இணைப்பாளர் புஷ்பராஜ் மற்றும் தபால் நிலைய உத்தியோகத்தர் திரு. சீலன் ஆகியோர் கலந்துகொண்டு, நிரந்தர முகவரி பெறுவதன் முக்கியத்துவம், அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டினர்.இதன்போது, தோட்ட மக்களின் நிரந்தர முகவரி தொடர்பான பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக மக்கள் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.நீண்ட காலமாக முகவரியற்ற நிலையில் வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களுக்கு அடையாளத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தும் முக்கியமான முயற்சியாக இத்திட்டம் பார்க்கப்படுகின்றது.இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மிக விரைவில் தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரிகள் வழங்கப்பட்டு, அவை பிரதேச செயலகத்திற்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.203 ஆண்டுகால வாழ்வுக்கு பின்னரும் முகவரியற்றவர்களாக இருக்க வேண்டிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, பெருந்தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.