• May 30 2026

அர்ச்சுனா உள்ளிட்டோருக்கு எதிரான நிகழ்நிலை வழக்கு ஒத்திவைப்பு

Chithra / May 30th 2026, 10:41 am
image

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்று நோய்ப்பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியக் குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட மருத்துவர்கள் இருவருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனாவும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும் ஆஜராகியிருந்தனர்.

அர்ச்சுனா உள்ளிட்டோருக்கு எதிரான நிகழ்நிலை வழக்கு ஒத்திவைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்று நோய்ப்பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியக் குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட மருத்துவர்கள் இருவருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனாவும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும் ஆஜராகியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement