• Apr 14 2026

பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பஸ்கள் சேவையில்! வெளியான விசேட அறிவிப்பு

Bus
Chithra / Apr 13th 2026, 10:31 am
image

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.


கடந்த சில நாட்களில் வழமையான பஸ் அட்டவணைக்கு மேலதிகமாக 1,500 பஸ்கள் கொழும்பிலிருந்து இயக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்தன.இன்றைய தினமும் பயணிகளின் வருகையைப் பொறுத்து தேவையான அளவு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.


இதேவேளை இன்றும், நாளையும் ரயில் சேவைகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


நேற்று மாலை முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார்.


மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மத்தியிலும், கொழும்பிலிருந்து இயங்கும் அனைத்து கடுகதி ரயில்கள் , தபால் ரயில்கள் மற்றும் நகராந்திர கடுகதி ரயில்கள் வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது


பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பஸ்கள் சேவையில் வெளியான விசேட அறிவிப்பு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களில் வழமையான பஸ் அட்டவணைக்கு மேலதிகமாக 1,500 பஸ்கள் கொழும்பிலிருந்து இயக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்தன.இன்றைய தினமும் பயணிகளின் வருகையைப் பொறுத்து தேவையான அளவு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.இதேவேளை இன்றும், நாளையும் ரயில் சேவைகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.நேற்று மாலை முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார்.மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மத்தியிலும், கொழும்பிலிருந்து இயங்கும் அனைத்து கடுகதி ரயில்கள் , தபால் ரயில்கள் மற்றும் நகராந்திர கடுகதி ரயில்கள் வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement