• May 21 2026

மது போதையில் வாகனத்தை செலுத்தியதால் விபரீதம் - மூவர் காயம்!

Chithra / Dec 8th 2025, 12:26 pm
image

 

குருணாகல் - நீர்கொழும்பு வீதியில் நாரம்மல, தம்பேலெஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கவனக்குறைவாக செலுத்தப்பட்ட கெப் வாகனம் ஒன்று, வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி, பின்னர் எதிர் திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கெப் வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மது போதையில் வாகனத்தை செலுத்தியதால் விபரீதம் - மூவர் காயம்  குருணாகல் - நீர்கொழும்பு வீதியில் நாரம்மல, தம்பேலெஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கவனக்குறைவாக செலுத்தப்பட்ட கெப் வாகனம் ஒன்று, வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி, பின்னர் எதிர் திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கெப் வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement