• May 20 2026

காவலரை துரத்தி வாளால் தாக்க முயன்ற இளைஞர்!

shanu / Jan 1st 2026, 2:50 pm
image

ஆலயத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த  காவலரை துரத்தி துரத்தி  இளைஞர் ஒருவர் வாளால் குத்த முயன்ற காணொளி  வைரலாகி பரபரப்படைய வைத்துள்ளது. 


இந்தச்சம்பவம் திருப்பூர் அரிசிக் கடை வீதி வீரராகவப் பெருமாள் கோயிலில்  இடம்பெற்றுள்ளது.  


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, குறித்த ஆலயத்திற்கு பொதுமக்கள் தரிசனத்திற்காக அதிகளவில்  சென்றிருந்தனர். 


இதன்போது அங்கிருந்த நபர் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாகப் பேசிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ராமகிருஷ்ணனிடம் பொதுமக்கள் முறைப்பாடளித்துள்ளனர். 


இதனையடுத்து அங்கு வந்த   ராமகிருஷ்ணன்  குறித்த  நபரை விரட்ட முயன்றபோது, ஆத்திரமடைந்த அந்நபர் தான் வைத்திருந்த அரிவாளால் அவரைத் தாக்க முயன்றுள்ளார். 


காவலர் ராமகிருஷ்ணன் தான் அணிந்திருந்த பெல்ட்டைக் கழற்றி தற்காப்புக்காக அந்நபரிடம் தப்ப முயன்றுள்ளார்.


இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சத்தமிடவே அருகில் பணியிலிருந்த காவலர்கள் குறித்த நபரிடம் பேச்சு கொடுத்து அவரை மடக்கிப் பிடித்தனர். இதில் அந்த நபர் போதையிலிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக  அவரை  காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.


இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் பொதுமக்களை ஆபாசமாகப் பேசிய நபரைத் தடுக்க முயன்றபோது கத்தியை வைத்து காவலரைத் தாக்க முயன்றுள்ளார். அவர் மதுபோதையில் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்போல தெரிவதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.- எனத் தெரிவித்தார். 


கோயில் திருவிழாவின்போது, காவலர் ஒருவரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவலரை துரத்தி வாளால் தாக்க முயன்ற இளைஞர் ஆலயத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த  காவலரை துரத்தி துரத்தி  இளைஞர் ஒருவர் வாளால் குத்த முயன்ற காணொளி  வைரலாகி பரபரப்படைய வைத்துள்ளது. இந்தச்சம்பவம் திருப்பூர் அரிசிக் கடை வீதி வீரராகவப் பெருமாள் கோயிலில்  இடம்பெற்றுள்ளது.  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, குறித்த ஆலயத்திற்கு பொதுமக்கள் தரிசனத்திற்காக அதிகளவில்  சென்றிருந்தனர். இதன்போது அங்கிருந்த நபர் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாகப் பேசிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ராமகிருஷ்ணனிடம் பொதுமக்கள் முறைப்பாடளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த   ராமகிருஷ்ணன்  குறித்த  நபரை விரட்ட முயன்றபோது, ஆத்திரமடைந்த அந்நபர் தான் வைத்திருந்த அரிவாளால் அவரைத் தாக்க முயன்றுள்ளார். காவலர் ராமகிருஷ்ணன் தான் அணிந்திருந்த பெல்ட்டைக் கழற்றி தற்காப்புக்காக அந்நபரிடம் தப்ப முயன்றுள்ளார்.இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சத்தமிடவே அருகில் பணியிலிருந்த காவலர்கள் குறித்த நபரிடம் பேச்சு கொடுத்து அவரை மடக்கிப் பிடித்தனர். இதில் அந்த நபர் போதையிலிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக  அவரை  காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் பொதுமக்களை ஆபாசமாகப் பேசிய நபரைத் தடுக்க முயன்றபோது கத்தியை வைத்து காவலரைத் தாக்க முயன்றுள்ளார். அவர் மதுபோதையில் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்போல தெரிவதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.- எனத் தெரிவித்தார். கோயில் திருவிழாவின்போது, காவலர் ஒருவரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement