• May 21 2026

தரையிறங்கிய விமானத்தில் வெடித்து சிதறிய டயர்; அலறி கூச்சலிட்ட 160 பயணிகளின் நிலை என்ன?

Aathira / Dec 19th 2025, 12:07 pm
image

சவுதி அரேபியா ஜித்தாவிலிருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்  தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு,  160 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, அதன் டயர் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.

இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.

இதனையடுத்து உடனடியாக விமானத்தை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க விமானி முடிவு செய்தார். 

விமானம் அவசரமாக தரையிறங்குவதை தொடர்ந்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விமான நிலையத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு துறையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். 

பின்னர் விமானி விமான நிலைய ஓடுபாதையில் தரையிறக்கப்பட்ட போது விமானத்தின் டயர் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. 

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். இதனையடுத்து 160 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டு பேருந்துகளில் கோழிக்கோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு, டயர் வெடிப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் டயர் வெடிப்பு குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தரையிறங்கிய விமானத்தில் வெடித்து சிதறிய டயர்; அலறி கூச்சலிட்ட 160 பயணிகளின் நிலை என்ன சவுதி அரேபியா ஜித்தாவிலிருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்  தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு,  160 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, அதன் டயர் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.இதனையடுத்து உடனடியாக விமானத்தை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க விமானி முடிவு செய்தார். விமானம் அவசரமாக தரையிறங்குவதை தொடர்ந்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விமான நிலையத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு துறையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். பின்னர் விமானி விமான நிலைய ஓடுபாதையில் தரையிறக்கப்பட்ட போது விமானத்தின் டயர் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். இதனையடுத்து 160 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதனைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டு பேருந்துகளில் கோழிக்கோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு, டயர் வெடிப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் டயர் வெடிப்பு குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement