யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நல்லையான் வீதி, சில்லாலை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய சாம் தவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான வாகனமும், முதியவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோதலின் தாக்கம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் மேலதிக சட்ட வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் மோட்டார் சைக்கிளுடன் அரச வாகனம் மோதி கோர விபத்து - முதியவர் பலி யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் நல்லையான் வீதி, சில்லாலை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய சாம் தவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான வாகனமும், முதியவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.மோதலின் தாக்கம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரின் சடலம் மேலதிக சட்ட வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.