• May 17 2026

பட்டா ரக வாகனம் மின் கம்பத்தில் மோதி பாரிய விபத்து; தெய்வாதீனமாக உயிர்தப்பிய சாரதி

Chithra / Feb 27th 2026, 12:04 pm
image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று அதிகாலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம் கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலிருந்த மின் கம்பத்தில் மோதுண்டு விபத்துள்குள்ளாகியுள்ளது.


பட்டா ரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி எதுவித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். 


எனினும் குறித்த வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மின்கம்பமும் உடைந்து வீழ்ந்துள்ளது.


இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


பட்டா ரக வாகனம் மின் கம்பத்தில் மோதி பாரிய விபத்து; தெய்வாதீனமாக உயிர்தப்பிய சாரதி மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று அதிகாலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம் கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலிருந்த மின் கம்பத்தில் மோதுண்டு விபத்துள்குள்ளாகியுள்ளது.பட்டா ரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி எதுவித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். எனினும் குறித்த வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மின்கம்பமும் உடைந்து வீழ்ந்துள்ளது.இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement