• Nov 12 2025

குரங்கு போல தாவும் ஆளுங்கட்சி உறுப்பினர்; நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள் - சபையில் ஜீவன் தொண்டமான்!

shanuja / Oct 10th 2025, 1:38 pm
image

மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு ஆதாரமாக  ஆளுங்கட்சி உறுப்பினர் குரங்கு போல் தாவும் வகையில் செயற்படுகின்றார். ஆகவே தயவுசெய்து நாகரிமாக நடந்துகொள்ளுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


மலையகத்தில் உங்கள் ஆட்சிக்காலத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளது என நான் கேட்ட கேள்விக்கு இதுவரை ஆளுந்தரப்பினர் பதில்கூறாது பதறுகின்றனர். 


நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பல வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால் தற்போது வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த செயற்பாடு நடைபெறுவதாக தெரியவில்லை. 


மலையகத்தில் அபிவிருத்தி செய்யப்படாத வீதிகள் பல காணப்படுகின்றன.மலையகத்தில் வீட்டுத்திட்டம் எங்கே? உங்கள் ஆட்சியில் எத்தனை வீடுகள் கட்டினீர்கள்? காணி உறுதிப் பத்திரங்கள் எவ்வளவு வழங்கினீர்கள்? தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவீர்களா?


இவ்வாறு பல கேள்விகளையும் ஜீவன் தொண்டமான் தனது உரையில் முன்வைத்துள்ளார். 


குரங்கு போல தாவும் ஆளுங்கட்சி உறுப்பினர்; நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள் - சபையில் ஜீவன் தொண்டமான் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு ஆதாரமாக  ஆளுங்கட்சி உறுப்பினர் குரங்கு போல் தாவும் வகையில் செயற்படுகின்றார். ஆகவே தயவுசெய்து நாகரிமாக நடந்துகொள்ளுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மலையகத்தில் உங்கள் ஆட்சிக்காலத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளது என நான் கேட்ட கேள்விக்கு இதுவரை ஆளுந்தரப்பினர் பதில்கூறாது பதறுகின்றனர். நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பல வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால் தற்போது வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த செயற்பாடு நடைபெறுவதாக தெரியவில்லை. மலையகத்தில் அபிவிருத்தி செய்யப்படாத வீதிகள் பல காணப்படுகின்றன.மலையகத்தில் வீட்டுத்திட்டம் எங்கே உங்கள் ஆட்சியில் எத்தனை வீடுகள் கட்டினீர்கள் காணி உறுதிப் பத்திரங்கள் எவ்வளவு வழங்கினீர்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவீர்களாஇவ்வாறு பல கேள்விகளையும் ஜீவன் தொண்டமான் தனது உரையில் முன்வைத்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement