• May 22 2026

26,000 மின்சார சபை உத்தியோகத்தர்களின் தொழில் பாதுகாப்பு கேள்விக்குறி! - தயாசிறி சுட்டிக்காட்டு

Chithra / Sep 23rd 2025, 10:30 am
image


மின்சார சபை மறுசீரமைப்பும் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. சுமார் 26,000 உத்தியோகத்தர்கள் வீதிக்கு இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுமார் 26,000 மின்சாரசபை உத்தியோகத்தர்கள் வீதிக்கு இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டத்தை கிழித்தெறிவதாகக் கூறியவர்கள் தற்போது அதை எவ்வித மாற்றங்களும் இன்றி நடைமுறைப்படுத்துகின்றனர்.

அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள மின்சாரசபை உத்தியோகத்தர்கள், தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதை விடுத்து, அவர்களுடன் மோதிப் பார்ப்போம் என்கின்றார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,  

மறுசீரமைப்பினை அவர்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதன் ஊடாக தமது தொழிலுக்கு ஏற்படக் கூடிய நிச்சயமற்ற தன்மைக்கு தீர்வினைக் கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

அவர்களது தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளமையே உண்மை நிலைவரமாகும் என  தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


26,000 மின்சார சபை உத்தியோகத்தர்களின் தொழில் பாதுகாப்பு கேள்விக்குறி - தயாசிறி சுட்டிக்காட்டு மின்சார சபை மறுசீரமைப்பும் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. சுமார் 26,000 உத்தியோகத்தர்கள் வீதிக்கு இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,சுமார் 26,000 மின்சாரசபை உத்தியோகத்தர்கள் வீதிக்கு இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டத்தை கிழித்தெறிவதாகக் கூறியவர்கள் தற்போது அதை எவ்வித மாற்றங்களும் இன்றி நடைமுறைப்படுத்துகின்றனர்.அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள மின்சாரசபை உத்தியோகத்தர்கள், தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதை விடுத்து, அவர்களுடன் மோதிப் பார்ப்போம் என்கின்றார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,  மறுசீரமைப்பினை அவர்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதன் ஊடாக தமது தொழிலுக்கு ஏற்படக் கூடிய நிச்சயமற்ற தன்மைக்கு தீர்வினைக் கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களது தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளமையே உண்மை நிலைவரமாகும் என  தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement