• Sep 08 2026

கட்டைக்காட்டில் களவாக மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மடக்கி பிடிப்பு

Aathira / Sep 7th 2026, 6:08 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்

சம்பவம் குறித்து மெலும் தெரிய வருகையில் ,

கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை, வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது

இதனடிப்படையில் குறித்த பகுதியை நேற்று(6) இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானதென்று பொலிசார் தெரிவித்துள்ளனர்

குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் பொலிசார் அவதானம் செலுத்தியுள்ளதுடன்.விரைவில் அவர்களை கைது செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


கட்டைக்காட்டில் களவாக மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மடக்கி பிடிப்பு யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்சம்பவம் குறித்து மெலும் தெரிய வருகையில் ,கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை, வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததுஇதனடிப்படையில் குறித்த பகுதியை நேற்று(6) இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானதென்று பொலிசார் தெரிவித்துள்ளனர்குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் பொலிசார் அவதானம் செலுத்தியுள்ளதுடன்.விரைவில் அவர்களை கைது செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement