முன்னாள் காதலன் அல்லது காதலியின் (Ex) நினைவுகளைத் துடைத்தெறிய போலாந்தின் ஓரியண்டேரியம் மிருகக்காட்சிசாலை (Orientarium Zoo) ஒரு விசித்திரமான வாய்ப்பை 2026 ஆம் ஆண்டிற்காக மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதன் மூலம், உங்கள் முன்னாள் துணையின் பெயரை ஒரு மடகஸ்கார் சீறும் கரப்பான் பூச்சிக்கு சூட்டலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அந்தப் பூச்சி அங்கிருக்கும் 'பாலைவன கீரி போன்ற பாலூட்டி விலங்குகளுக்கு' (Meerkat) உணவாக வழங்கப்படும்.
இந்த வினோதப் பழிவாங்கலுக்குப் பின்னால் ஒரு நல்ல நோக்கமும் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதிலிருந்து கிடைக்கும் வருமானம் அழியும் நிலையில் உள்ள விலங்குகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற ஒரு நிதி திரட்டும் முயற்சியை அமெரிக்காவின் புகழ்பெற்ற சான் அன்டோனியோ (San Antonio) மிருகக்காட்சிசாலையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் காதலர்களை பழிவாங்கும் புதிய நுட்பம் முன்னாள் காதலன் அல்லது காதலியின் (Ex) நினைவுகளைத் துடைத்தெறிய போலாந்தின் ஓரியண்டேரியம் மிருகக்காட்சிசாலை (Orientarium Zoo) ஒரு விசித்திரமான வாய்ப்பை 2026 ஆம் ஆண்டிற்காக மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதன் மூலம், உங்கள் முன்னாள் துணையின் பெயரை ஒரு மடகஸ்கார் சீறும் கரப்பான் பூச்சிக்கு சூட்டலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அந்தப் பூச்சி அங்கிருக்கும் 'பாலைவன கீரி போன்ற பாலூட்டி விலங்குகளுக்கு' (Meerkat) உணவாக வழங்கப்படும். இந்த வினோதப் பழிவாங்கலுக்குப் பின்னால் ஒரு நல்ல நோக்கமும் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து கிடைக்கும் வருமானம் அழியும் நிலையில் உள்ள விலங்குகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஒரு நிதி திரட்டும் முயற்சியை அமெரிக்காவின் புகழ்பெற்ற சான் அன்டோனியோ (San Antonio) மிருகக்காட்சிசாலையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.