மேலும் இவ்வாறான நாற்சந்தியில் விழிப்பூட்டல் சமிஞ்சைகள் இருந்தும் விபத்துக்கள் இடம்பெற்று வருவதால் வேகத்தடை முறைமையினை நான்கு திசைகளிலும் அமைக்குமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கணப்பொழுதின் கவனக்குறைவு; சுவரில் பாய்ந்த மோட்டார்சைக்கிள் - விபத்தின் அதிர்ச்சி சிசிரிவி காட்சி மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி நாற்சந்தி ஒன்றில் மோதிக் கொண்ட விபத்தின் சிசிரிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இவ்விபத்து சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் இரண்டாம் குறுக்கு வீதியில் நேற்று திங்கட்கிழமை(20) இடம்பெற்றது.இதன் போது குறித்த நாற்சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்கள் சந்தியில் கவனக்குறைவினால் விபத்திற்கு உள்ளாகினர். விபத்தில் காயமடைந்த இருவரும் அருகில் உள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தின் காணொளி அருகிலிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகி வெளிவந்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. மேலும் இவ்வாறான நாற்சந்தியில் விழிப்பூட்டல் சமிஞ்சைகள் இருந்தும் விபத்துக்கள் இடம்பெற்று வருவதால் வேகத்தடை முறைமையினை நான்கு திசைகளிலும் அமைக்குமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.