பருத்தித்துறை நகர பிதாவுக்கு எதிராக சபை உறுப்பினர் திருஞானசம்பந்தர் சந்திரசேகர் இரண்டு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபை மாதாந்த அமர்வு நிறைவுற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு இரண்டு குற்றச் சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
கடந்த சபைக் கூட்டத்தின் போது கணக்காய்வாளர் ஒருவருக்கு எதிராக தான் கருத்து தெரிவித்ததாகவும், அதனை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அது தொடர்பாக நகரபிதாவால் தன்னிடம் விளக்கம் கோரப் பட்டுள்ளதக்கவும், அதில் குறிப்பிட பட்ட சட்ட பிரிவு பல உண்டு என்றும், இதனால் அது தொடர்பில் நகரபிதாவிடம் விளக்கம் கேட்டதுபோது நகரபிதா கூட்டத்தை முடித்துவிட்டு சென்றதாகவும் குறிப்பிட்ட உறுப்பினர் திருஞானசம்பந்தர் சந்திரசேகர் இதனை சபை அமர்வில் கேட்டபோது சபை அமர்வை முடித்துவிட்டு சென்றதாகவும்,
இதேவேளை வடமராட்சி தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற நிலையில் அதற்கான குடிநீர் வசதி சுகாதார வசதிகள் எவற்றையும் நகர சபை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது தொடர்பாக நகர பிதாவிடம் கேட்ட போது இரண்டு நாட்களாக குறித்த வேலைகள் ஆலய பகுதியில் இடம்பெற்று வருவதாகவும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்
பருத்தித்துறை நகர பிதாவுக்கு எதிராக உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டு பருத்தித்துறை நகர பிதாவுக்கு எதிராக சபை உறுப்பினர் திருஞானசம்பந்தர் சந்திரசேகர் இரண்டு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபை மாதாந்த அமர்வு நிறைவுற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு இரண்டு குற்றச் சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.கடந்த சபைக் கூட்டத்தின் போது கணக்காய்வாளர் ஒருவருக்கு எதிராக தான் கருத்து தெரிவித்ததாகவும், அதனை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அது தொடர்பாக நகரபிதாவால் தன்னிடம் விளக்கம் கோரப் பட்டுள்ளதக்கவும், அதில் குறிப்பிட பட்ட சட்ட பிரிவு பல உண்டு என்றும், இதனால் அது தொடர்பில் நகரபிதாவிடம் விளக்கம் கேட்டதுபோது நகரபிதா கூட்டத்தை முடித்துவிட்டு சென்றதாகவும் குறிப்பிட்ட உறுப்பினர் திருஞானசம்பந்தர் சந்திரசேகர் இதனை சபை அமர்வில் கேட்டபோது சபை அமர்வை முடித்துவிட்டு சென்றதாகவும், இதேவேளை வடமராட்சி தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற நிலையில் அதற்கான குடிநீர் வசதி சுகாதார வசதிகள் எவற்றையும் நகர சபை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தொடர்பாக நகர பிதாவிடம் கேட்ட போது இரண்டு நாட்களாக குறித்த வேலைகள் ஆலய பகுதியில் இடம்பெற்று வருவதாகவும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்