• Jul 07 2026

யாழில் மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து - இருவர் படுகாயம்

Chithra / Jul 6th 2026, 4:26 pm
image



யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஏ9 பிரதான வீதியின் நுணாவில் பகுதியில் பாரவூர்தி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


இந்த விபத்து நேற்று (05) மாலை சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, 


யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தியுடன், அதே திசையில் பின்னால் வந்த கார் மோதியுள்ளது.


அதனைத் தொடர்ந்து, குறித்த வாகனங்களை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளும் விபத்தில் சிக்கியுள்ளது.


இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், காரின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து - இருவர் படுகாயம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஏ9 பிரதான வீதியின் நுணாவில் பகுதியில் பாரவூர்தி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று (05) மாலை சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தியுடன், அதே திசையில் பின்னால் வந்த கார் மோதியுள்ளது.அதனைத் தொடர்ந்து, குறித்த வாகனங்களை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளும் விபத்தில் சிக்கியுள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், காரின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement