• Aug 31 2026

பங்காளிகளாக மாறும் பயணம் மலையகத்தில் உருவாகும் புதிய மாண்புக் கலாச்சாரம்

dorin / Aug 31st 2026, 2:23 pm
image

பொகவந்தலாவை, பெட்ரெஸ்ஸோ தோட்ட மக்கள், சமூக கண்ணியமும் உரிமையுணர்வும் கொண்ட சமூகமாக எவ்வாறு உருவாக முடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகத்திகழ்கின்றனர்.

சமூக மற்றும் அபிவிருத்தி நிகழ்வுகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏற்பாடு செய்வதும், சமூக மக்கள் அதில் பயனாளிகளாகவோ, பார்வையாளர்களாகவோ அல்லது அழைக்கப்பட்ட பங்கேற்பாளர்களாகவோ கலந்து கொள்வதுமே பல ஆண்டுகளாக நிலவி வந்த ஒரு வழக்கம்

ஆனால், பெட்ரெஸ்ஸோ தோட்ட மக்கள் இந்த நிலைமையை மாற்றத் தொடங்கியுள்ளனர்.

மலையகம் 200 நினைவேந்தல் நிகழ்வுகள் இதற்கு முன்னர் பெரும்பாலும் வெளி நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டு,அதற்கான செலவுகளும் அந்த நிறுவனங்களினாலேயே ஏற்கப்பட்டன.

ஆனால், பெட்ரெஸ்ஸோ மக்கள் இந்த நடைமுறையிலிருந்து மாறுபட்ட ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மலையகம் 200 வரலாற்றுப் பயணத்தின் மூன்றாவது ஆண்டு நினைவாக “மலையகம் 203” நிகழ்வை தாங்களே ஏற்பாடு செய்து, அதற்கான முழுச் செலவுகளையும் தாங்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், வரலாற்றுச் சிறப்புமிக்க மலையகம் 200 நடைபயணத்தில் முழுநேரமாகப் பங்கேற்ற திரு. லோகநாதன் மற்றும் திரு. கணேசன் ஆகியோரை கௌரவித்ததுடன், அந்த வரலாற்றுப் பயணம் வெற்றியடைவதற்கு பங்களித்த Pசுநுனுழு நிறுவனத்தையும் நினைவுகூர்ந்து கௌரவித்துள்ளனர்.

இது வெறுமனே ஒரு நினைவேந்தல் நிகழ்வு அல்ல.

இது கண்ணியம், உரிமையுணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சுய சக்தியில் தங்கியிருத்தல்  ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சமூகப் பிரகடனமாகும்.

தோட்டத்தின் கிராம அபிவிருத்திக் குழு (VDC) மற்றும் முன்பள்ளி அபிவிருத்திச் சபை  மக்களுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமை, சமூகத்தின் வளர்ந்து வரும் உரிமையுணர்வையும் பங்கேற்பையும் வெளிப்படுத்துகிறது.

மலையக சமூகங்களில் நாம் காண விரும்பும் மாற்றம் இதுவே:

பயனாளிகளிலிருந்து குடிமக்களாக…

பங்கேற்பாளர்களிலிருந்து பங்காளிகளாக…

மற்றவர்களில் தங்கியிருப்பதிலிருந்து உரிமையுணர்வுக்கு…அபிவிருத்தியைப் பெறுபவர்கள் என்ற நிலையில் இருந்து  அபிவிருத்தியை வழிநடத்துபவர்களாக…

பெட்ரெஸ்ஸோ தோட்ட மக்கள் ஒன்றிணைந்து, தங்களது வரலாற்றை நினைவுகூரவும், தங்களுக்கான நிகழ்வுகளைத் தாங்களே ஏற்பாடு செய்யவும், அதற்கான பொறுப்பையும் வளங்களையும் ஏற்றுக்கொள்ளவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

சமூகங்கள் வலுவூட்டப்படும்போது, அவர்கள் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர்.

PREDO-வைப் பொறுத்தவரை, இது ஒரு ஆழமான அர்த்தமுள்ள வெற்றியாகும்.

சமூகங்கள் தங்களது நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக நிர்வனங்களை  சார்ந்திருப்பது எமது மிகப்பெரிய வெற்றி அல்ல.

நிர்வனங்களின் உதவி  இல்லாமலேயே சமூகங்கள் தன்னம்பிக்கையுடனும், திறனுடனும், உரிமையுணர்வுடனும் தங்களது செயல்களைத் தாங்களே முன்னெடுக்கத் தொடங்குவதுதான் நிர்வனங்களின் உண்மையான வெற்றி.

ஃபெட்ரெஸ்ஸோ தோட்டம் — கண்ணியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், மக்கள் தலைமையிலான வளர்ச்சியுடனும் முன்னேறும் ஒரு மலையக சமூகத்திற்கு முன்னுதாரணமாக மாறி வருகிறது.

இதுதான் நாம் எதிர்பார்க்கும்  மலையகம்.

இதுதான் சமூக வலுவூட்டல் செயல்பாட்டில் வெளிப்படும் தருணம்.

இதுதான் மக்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி.

இது உள்ளடக்கிய எதிர்கால  நிதி செயல்பாட்டில் ஒரு வெற்றிகரமான விளைவாகும்.


பங்காளிகளாக மாறும் பயணம் மலையகத்தில் உருவாகும் புதிய மாண்புக் கலாச்சாரம் பொகவந்தலாவை, பெட்ரெஸ்ஸோ தோட்ட மக்கள், சமூக கண்ணியமும் உரிமையுணர்வும் கொண்ட சமூகமாக எவ்வாறு உருவாக முடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகத்திகழ்கின்றனர்.சமூக மற்றும் அபிவிருத்தி நிகழ்வுகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏற்பாடு செய்வதும், சமூக மக்கள் அதில் பயனாளிகளாகவோ, பார்வையாளர்களாகவோ அல்லது அழைக்கப்பட்ட பங்கேற்பாளர்களாகவோ கலந்து கொள்வதுமே பல ஆண்டுகளாக நிலவி வந்த ஒரு வழக்கம்ஆனால், பெட்ரெஸ்ஸோ தோட்ட மக்கள் இந்த நிலைமையை மாற்றத் தொடங்கியுள்ளனர்.மலையகம் 200 நினைவேந்தல் நிகழ்வுகள் இதற்கு முன்னர் பெரும்பாலும் வெளி நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டு,அதற்கான செலவுகளும் அந்த நிறுவனங்களினாலேயே ஏற்கப்பட்டன.ஆனால், பெட்ரெஸ்ஸோ மக்கள் இந்த நடைமுறையிலிருந்து மாறுபட்ட ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.மலையகம் 200 வரலாற்றுப் பயணத்தின் மூன்றாவது ஆண்டு நினைவாக “மலையகம் 203” நிகழ்வை தாங்களே ஏற்பாடு செய்து, அதற்கான முழுச் செலவுகளையும் தாங்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.அதுமட்டுமல்லாமல், வரலாற்றுச் சிறப்புமிக்க மலையகம் 200 நடைபயணத்தில் முழுநேரமாகப் பங்கேற்ற திரு. லோகநாதன் மற்றும் திரு. கணேசன் ஆகியோரை கௌரவித்ததுடன், அந்த வரலாற்றுப் பயணம் வெற்றியடைவதற்கு பங்களித்த Pசுநுனுழு நிறுவனத்தையும் நினைவுகூர்ந்து கௌரவித்துள்ளனர்.இது வெறுமனே ஒரு நினைவேந்தல் நிகழ்வு அல்ல.இது கண்ணியம், உரிமையுணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சுய சக்தியில் தங்கியிருத்தல்  ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சமூகப் பிரகடனமாகும்.தோட்டத்தின் கிராம அபிவிருத்திக் குழு (VDC) மற்றும் முன்பள்ளி அபிவிருத்திச் சபை  மக்களுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமை, சமூகத்தின் வளர்ந்து வரும் உரிமையுணர்வையும் பங்கேற்பையும் வெளிப்படுத்துகிறது.மலையக சமூகங்களில் நாம் காண விரும்பும் மாற்றம் இதுவே:பயனாளிகளிலிருந்து குடிமக்களாக…பங்கேற்பாளர்களிலிருந்து பங்காளிகளாக…மற்றவர்களில் தங்கியிருப்பதிலிருந்து உரிமையுணர்வுக்கு…அபிவிருத்தியைப் பெறுபவர்கள் என்ற நிலையில் இருந்து  அபிவிருத்தியை வழிநடத்துபவர்களாக…பெட்ரெஸ்ஸோ தோட்ட மக்கள் ஒன்றிணைந்து, தங்களது வரலாற்றை நினைவுகூரவும், தங்களுக்கான நிகழ்வுகளைத் தாங்களே ஏற்பாடு செய்யவும், அதற்கான பொறுப்பையும் வளங்களையும் ஏற்றுக்கொள்ளவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.சமூகங்கள் வலுவூட்டப்படும்போது, அவர்கள் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர்.PREDO-வைப் பொறுத்தவரை, இது ஒரு ஆழமான அர்த்தமுள்ள வெற்றியாகும்.சமூகங்கள் தங்களது நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக நிர்வனங்களை  சார்ந்திருப்பது எமது மிகப்பெரிய வெற்றி அல்ல.நிர்வனங்களின் உதவி  இல்லாமலேயே சமூகங்கள் தன்னம்பிக்கையுடனும், திறனுடனும், உரிமையுணர்வுடனும் தங்களது செயல்களைத் தாங்களே முன்னெடுக்கத் தொடங்குவதுதான் நிர்வனங்களின் உண்மையான வெற்றி.ஃபெட்ரெஸ்ஸோ தோட்டம் — கண்ணியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், மக்கள் தலைமையிலான வளர்ச்சியுடனும் முன்னேறும் ஒரு மலையக சமூகத்திற்கு முன்னுதாரணமாக மாறி வருகிறது.இதுதான் நாம் எதிர்பார்க்கும்  மலையகம்.இதுதான் சமூக வலுவூட்டல் செயல்பாட்டில் வெளிப்படும் தருணம்.இதுதான் மக்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி.இது உள்ளடக்கிய எதிர்கால  நிதி செயல்பாட்டில் ஒரு வெற்றிகரமான விளைவாகும்.

Advertisement

Advertisement

Advertisement