• Sep 17 2026

ஒரு விபத்தை படம் பிடிக்கச் சென்ற போது வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்

Ziya / Sep 16th 2026, 9:49 am
image

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பேருந்து மற்றும் வாகனம் மோதிய பயங்கர விபத்தை நேரலையில் செய்தியாக வழங்கிக் கொண்டிருந்த செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஒன்று சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லாஸ் ஏஞ்சல்ஸின் சாட்ஸ்வொர்த் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு ஒரு எஸ்யூவி வாகனம் நகரப் பேருந்து மீது மோதியதில் ஏற்கனவே இருவர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்திருந்தனர்.


இந்த விபத்து தொடர்பான காட்சிகளை வானிலிருந்து நேரலையில் பதிவு செய்து கொண்டிருந்த செய்தி ஹெலிகாப்டர், அருகிலுள்ள வணிகக் கட்டிடங்களுக்கு இடையிலான பகுதியில் திடீரென விழுந்து தீப்பற்றியது.


பின்னர் கிடைத்த தகவலின்படி, ஹெலிகாப்டர் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.


எனினும், உயிரிழந்த மூவரும் ஹெலிகாப்டரில் இருந்தவர்களா அல்லது அவர்களில் சிலர் தரையில் இருந்தவர்களா என்பது குறித்த முழுமையான தகவல் அதிகாரிகளால் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.


விபத்தில் ஹெலிகாப்டர் கடுமையாக சேதமடைந்ததுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.


ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகமும் விசாரணையை முன்னெடுத்து வருகின்றன.


ஒரு விபத்தை படம் பிடிக்கச் சென்ற போது வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பேருந்து மற்றும் வாகனம் மோதிய பயங்கர விபத்தை நேரலையில் செய்தியாக வழங்கிக் கொண்டிருந்த செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஒன்று சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லாஸ் ஏஞ்சல்ஸின் சாட்ஸ்வொர்த் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு ஒரு எஸ்யூவி வாகனம் நகரப் பேருந்து மீது மோதியதில் ஏற்கனவே இருவர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்திருந்தனர்.இந்த விபத்து தொடர்பான காட்சிகளை வானிலிருந்து நேரலையில் பதிவு செய்து கொண்டிருந்த செய்தி ஹெலிகாப்டர், அருகிலுள்ள வணிகக் கட்டிடங்களுக்கு இடையிலான பகுதியில் திடீரென விழுந்து தீப்பற்றியது.பின்னர் கிடைத்த தகவலின்படி, ஹெலிகாப்டர் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.எனினும், உயிரிழந்த மூவரும் ஹெலிகாப்டரில் இருந்தவர்களா அல்லது அவர்களில் சிலர் தரையில் இருந்தவர்களா என்பது குறித்த முழுமையான தகவல் அதிகாரிகளால் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.விபத்தில் ஹெலிகாப்டர் கடுமையாக சேதமடைந்ததுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகமும் விசாரணையை முன்னெடுத்து வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement