• Sep 05 2026

குளக்கரையில் கைவிடப்பட்ட பொதியில் துப்பாக்கி, ஆயுதங்கள் ! மிஹிந்தலையில் அதிர்ச்சி

Chithra / Sep 5th 2026, 11:55 am
image


மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கரையில் உரிமையாளரற்ற நிலையில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.


குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று இருப்பதாக நேற்று (04) கிடைத்த தகவலின் அடிப்படையில், மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.


இதன்போது T-56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 4 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அங்கு கொண்டுவந்து கைவிட்ட நபர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.


சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குளக்கரையில் கைவிடப்பட்ட பொதியில் துப்பாக்கி, ஆயுதங்கள் மிஹிந்தலையில் அதிர்ச்சி மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கரையில் உரிமையாளரற்ற நிலையில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று இருப்பதாக நேற்று (04) கிடைத்த தகவலின் அடிப்படையில், மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதன்போது T-56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 4 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அங்கு கொண்டுவந்து கைவிட்ட நபர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement