மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரபொல பகுதியில் மின்னல் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை வயல் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.
உயிரிழந்தவர் பொரப்பொல, மகாஓயா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மழையுடனான வானிலை நிலவினாலும் சில பகுதிகளில் வெப்பமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது (Heat Index) சில இடங்களில் ‘அவதான நிலை’ (Caution Level) வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி பலி - நாட்டில் இன்றும் இடியுடன் மழை மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரபொல பகுதியில் மின்னல் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை வயல் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்தவர் பொரப்பொல, மகாஓயா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.குறிப்பாக, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்கின்ற போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.மழையுடனான வானிலை நிலவினாலும் சில பகுதிகளில் வெப்பமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது (Heat Index) சில இடங்களில் ‘அவதான நிலை’ (Caution Level) வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.