• Mar 28 2026

ஒலிம்பிக்கில் அதிரடிப் புரட்சி: பெண்களுக்கு மட்டுமே அனுமதி - திருநங்கைகளுக்குத் தடை விதித்தது சர்வதேச ஒலிம்பிக் குழு !

Ziya / Mar 27th 2026, 5:20 pm
image

சர்வதேச விளையாட்டுத் துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த பாலின விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) ஒரு அதிரடித் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.


நேற்று (மார்ச் 26, 2026) வெளியாகியுள்ள இந்தத் தீர்மானத்தின்படி:


பெண் பிரிவில் போட்டியிடும் வீராங்கனைகள் உயிரியல் ரீதியாகப் பெண் என்பதை உறுதிப்படுத்த 'SRY gene test' எனப்படும் மரபணு சோதனையை இனி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.


வரும் 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் மூன்றாம் பாலினத்தவர்கள் (Transgender Women) பெண் பிரிவில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆண்களுக்கான உடல் வளர்ச்சியைப் பெற்றவர்கள் பெண் பிரிவில் போட்டியிடுவது சமமான போட்டியாக இருக்காது மற்றும் அது வீராங்கனைகளுக்குப் பாதுகாப்பற்றது என IOC தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி விளக்கம் அளித்துள்ளார்.


2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெடித்த பாலின சர்ச்சைகளைத் தொடர்ந்து, 18 மாத கால ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே 2025 பிப்ரவரியில் அமெரிக்காவில் இதற்கான தடையை அமல்படுத்தியிருந்தார். 


தற்போது IOC எடுத்துள்ள முடிவு அவரது கொள்கைக்குப் சர்வதேச அளவில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.


மனித உரிமை மற்றும் LGBTQ+ அமைப்புகள் இந்த முடிவை "ஒதுக்கல் நடவடிக்கை" எனச் சாடி வருகின்றன. 


இது திருநங்கைகளின் விளையாட்டு உரிமையைப் பறிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


பெரும்பாலான பெண் வீராங்கனைகள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். 


இது போட்டிகளில் நியாயமான தன்மையை (Fair Play) உறுதி செய்யும் என்றும், உயிரியல் ரீதியாக வலிமை வாய்ந்தவர்களுடன் போட்டியிடும் சவாலை நீக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

ஒலிம்பிக்கில் அதிரடிப் புரட்சி: பெண்களுக்கு மட்டுமே அனுமதி - திருநங்கைகளுக்குத் தடை விதித்தது சர்வதேச ஒலிம்பிக் குழு சர்வதேச விளையாட்டுத் துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த பாலின விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) ஒரு அதிரடித் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.நேற்று (மார்ச் 26, 2026) வெளியாகியுள்ள இந்தத் தீர்மானத்தின்படி:பெண் பிரிவில் போட்டியிடும் வீராங்கனைகள் உயிரியல் ரீதியாகப் பெண் என்பதை உறுதிப்படுத்த 'SRY gene test' எனப்படும் மரபணு சோதனையை இனி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.வரும் 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் மூன்றாம் பாலினத்தவர்கள் (Transgender Women) பெண் பிரிவில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆண்களுக்கான உடல் வளர்ச்சியைப் பெற்றவர்கள் பெண் பிரிவில் போட்டியிடுவது சமமான போட்டியாக இருக்காது மற்றும் அது வீராங்கனைகளுக்குப் பாதுகாப்பற்றது என IOC தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி விளக்கம் அளித்துள்ளார்.2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெடித்த பாலின சர்ச்சைகளைத் தொடர்ந்து, 18 மாத கால ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே 2025 பிப்ரவரியில் அமெரிக்காவில் இதற்கான தடையை அமல்படுத்தியிருந்தார். தற்போது IOC எடுத்துள்ள முடிவு அவரது கொள்கைக்குப் சர்வதேச அளவில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.மனித உரிமை மற்றும் LGBTQ+ அமைப்புகள் இந்த முடிவை "ஒதுக்கல் நடவடிக்கை" எனச் சாடி வருகின்றன. இது திருநங்கைகளின் விளையாட்டு உரிமையைப் பறிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பெரும்பாலான பெண் வீராங்கனைகள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். இது போட்டிகளில் நியாயமான தன்மையை (Fair Play) உறுதி செய்யும் என்றும், உயிரியல் ரீதியாக வலிமை வாய்ந்தவர்களுடன் போட்டியிடும் சவாலை நீக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement