• Aug 24 2025

இரு மீனவர்களுக்கிடையே கைகலப்பு வாள்வெட்டில் முடிந்தது! ஒருவர் படுகொலை; யாழில் பயங்கரம்

Chithra / Aug 23rd 2025, 9:13 am
image

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி, கிழக்கு சுண்டிக்குள பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வாடியில் நேற்று இரவு இரு மீனவர்களுக்கிடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

கைகலப்பு முற்றியதில் இருவருக்கும் இடையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

படுகொலை செய்யப்பட்டவர் மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இரு மீனவர்களுக்கிடையே கைகலப்பு வாள்வெட்டில் முடிந்தது ஒருவர் படுகொலை; யாழில் பயங்கரம் யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடமராட்சி, கிழக்கு சுண்டிக்குள பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வாடியில் நேற்று இரவு இரு மீனவர்களுக்கிடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.கைகலப்பு முற்றியதில் இருவருக்கும் இடையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்டவர் மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் என தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement