• Apr 28 2026

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சிறுவன்; நீதி வேண்டி யாழ்.நகரில் போராட்டம்!

Chithra / Feb 22nd 2026, 11:52 am
image

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள்  ஃபயாஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று யாழ். பஸ் நிலையப் பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முனெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், சிறுவனின் உறவுகளுடன், வேலன் சுவாமி, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், யாழ். மாநகர உறுப்பினர் நிசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து போராட்டத்துக்கு வலுச்சேர்த்தனர்.


குறித்த போராட்டத்தின் போது பொலிசாரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் தாங்கி கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய போராட்டக்காரர்கள்,

குறித்த கொலைக்கு காரணமான பொலிசாரை தண்டிக்க வேண்டும் என்றும் இவ்வாறான மிலேச்சத்தனமான கொலைகளை பொலிசார் இனி மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


முன்பதாக கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் வேலணை - அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையில் இருந்த பொலிசாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்றட்ட ஹயஸ் ரக வாகனம் மீதே தாம்  துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதன் போதே குறித்த 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சிறுவன்; நீதி வேண்டி யாழ்.நகரில் போராட்டம் யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள்  ஃபயாஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று யாழ். பஸ் நிலையப் பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முனெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், சிறுவனின் உறவுகளுடன், வேலன் சுவாமி, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், யாழ். மாநகர உறுப்பினர் நிசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து போராட்டத்துக்கு வலுச்சேர்த்தனர்.குறித்த போராட்டத்தின் போது பொலிசாரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் தாங்கி கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய போராட்டக்காரர்கள்,குறித்த கொலைக்கு காரணமான பொலிசாரை தண்டிக்க வேண்டும் என்றும் இவ்வாறான மிலேச்சத்தனமான கொலைகளை பொலிசார் இனி மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.முன்பதாக கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் வேலணை - அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையில் இருந்த பொலிசாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்றட்ட ஹயஸ் ரக வாகனம் மீதே தாம்  துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதன் போதே குறித்த 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement