• Oct 05 2026

கடல் எல்லையில் சிக்கிய 9 இந்திய மீனவர்கள்! நெடுந்தீவு அருகே பரபரப்பு

Chithra / Oct 4th 2026, 11:19 am
image


யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு தெற்கே, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நேற்று மாலை 9 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


ஆனால், இதோடு நடவடிக்கை நிற்கவில்லை…


மீனவர்கள் பயன்படுத்திய இழுவைப்படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


அடுத்ததாக, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


பாக் நீரிணையில் இந்தியா–இலங்கை மீனவர்களுக்கு இடையிலான கடல் எல்லை தொடர்பான பதற்றம் நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.


கடல் எல்லையில் சிக்கிய 9 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு அருகே பரபரப்பு யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு தெற்கே, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நேற்று மாலை 9 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.ஆனால், இதோடு நடவடிக்கை நிற்கவில்லை…மீனவர்கள் பயன்படுத்திய இழுவைப்படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.அடுத்ததாக, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.பாக் நீரிணையில் இந்தியா–இலங்கை மீனவர்களுக்கு இடையிலான கடல் எல்லை தொடர்பான பதற்றம் நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement