• Apr 15 2026

"நடுக்கடலில் தத்தளிக்கும் 50 கத்தார் கப்பல்கள்!" - ஹோர்முஸ் பூட்டப்பட்டதால் கதி கலங்கும் எரிசக்தி சந்தை!

Ziya / Apr 6th 2026, 4:30 pm
image

உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி நாடான கத்தாரின் 50-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள், சரக்கு ஏதுமின்றி ஆசியக் கடற்பரப்பில் அலைந்து திரிவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

புளூம்பர்க் (Bloomberg) மற்றும் கெப்லர் (Kpler) தரவுகள் மூலம் இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.

மேற்கு இந்தியா, இலங்கை, மலாக்கா நீரிணை மற்றும் சிங்கப்பூர் கடல் பகுதிகளில் இந்தக் கப்பல்கள் காணப்படுகின்றன.

இந்தக் கப்பல்களில் ஒன்றில் கூட எரிவாயு இல்லை. மார்ச் தொடக்கத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலால் கத்தாரின் பிரம்மாண்ட எரிவாயு ஏற்றுமதி ஆலை மூடப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம்.

போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், கத்தாரால் தனது உற்பத்தியை உலக நாடுகளுக்கு அனுப்ப முடியாமல் கப்பல்கள் கடலிலேயே முடங்கியுள்ளன.

இதற்கிடையே, எண்ணெய் போக்குவரத்துக்கு உலகளவில் மிகவும் முக்கிய மையப்புள்ளியாக உள்ள ஹோர்முஸ் நீரிணை, ஈரான் போரில் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று ஐக்கிய அரபுச் சிற்றரசு அதிகாரி அன்வார் கார்கே‌ஷ் கூறியுள்ளார்.


"நடுக்கடலில் தத்தளிக்கும் 50 கத்தார் கப்பல்கள்" - ஹோர்முஸ் பூட்டப்பட்டதால் கதி கலங்கும் எரிசக்தி சந்தை உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி நாடான கத்தாரின் 50-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள், சரக்கு ஏதுமின்றி ஆசியக் கடற்பரப்பில் அலைந்து திரிவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. புளூம்பர்க் (Bloomberg) மற்றும் கெப்லர் (Kpler) தரவுகள் மூலம் இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.மேற்கு இந்தியா, இலங்கை, மலாக்கா நீரிணை மற்றும் சிங்கப்பூர் கடல் பகுதிகளில் இந்தக் கப்பல்கள் காணப்படுகின்றன.இந்தக் கப்பல்களில் ஒன்றில் கூட எரிவாயு இல்லை. மார்ச் தொடக்கத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலால் கத்தாரின் பிரம்மாண்ட எரிவாயு ஏற்றுமதி ஆலை மூடப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம்.போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், கத்தாரால் தனது உற்பத்தியை உலக நாடுகளுக்கு அனுப்ப முடியாமல் கப்பல்கள் கடலிலேயே முடங்கியுள்ளன.இதற்கிடையே, எண்ணெய் போக்குவரத்துக்கு உலகளவில் மிகவும் முக்கிய மையப்புள்ளியாக உள்ள ஹோர்முஸ் நீரிணை, ஈரான் போரில் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று ஐக்கிய அரபுச் சிற்றரசு அதிகாரி அன்வார் கார்கே‌ஷ் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement