• Apr 30 2026

AI மூலம் ஆசிரியர்களை இழிவுபடுத்திய 05 மாணவர்கள் கைது - யாழில் அதிர்ச்சி சம்பவம்

Chithra / Apr 30th 2026, 10:55 am
image

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கி அதனை வட்ஸ்அப் ஊடாகவும் பகிர்ந்த 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்திஇ 16 ஆசிரியர்கள் அடங்கிய குழு நிழற்படத்தை குறித்த மாணவர்கள் அவமதிப்புக்குள்ளாக்கும் வகையில் தயார் செய்துள்ளனர்.


இந்த விடயம் தொடர்பில் குறித்த பாடசாலை நிர்வாகத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


குறித்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின் கிளிநொச்சி நீதிவான் முன்பு அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட மாணவர்களை மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

AI மூலம் ஆசிரியர்களை இழிவுபடுத்திய 05 மாணவர்கள் கைது - யாழில் அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கி அதனை வட்ஸ்அப் ஊடாகவும் பகிர்ந்த 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்திஇ 16 ஆசிரியர்கள் அடங்கிய குழு நிழற்படத்தை குறித்த மாணவர்கள் அவமதிப்புக்குள்ளாக்கும் வகையில் தயார் செய்துள்ளனர்.இந்த விடயம் தொடர்பில் குறித்த பாடசாலை நிர்வாகத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின் கிளிநொச்சி நீதிவான் முன்பு அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மாணவர்களை மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement