• Jul 23 2025

பாடசாலை வகுப்பறையில் மீட்கப்பட்ட 30 பாம்புக் குட்டிகள்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

Chithra / Jul 22nd 2025, 12:05 pm
image


பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக் குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள போகமுவ மத்திய கல்லூரியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில்  30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதில், 153 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் உள்ளனர். 

பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால் பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பட்டுள்ளனர்.

பாடசாலை வகுப்பறையில் மீட்கப்பட்ட 30 பாம்புக் குட்டிகள்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக் குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குருநாகல் மாவட்டத்தில் உள்ள போகமுவ மத்திய கல்லூரியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு அறிவித்தனர்.இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில்  30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதில், 153 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் உள்ளனர். பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால் பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement