• Apr 18 2026

கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்கள் விடுதலை – 12 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Aathira / Apr 1st 2026, 8:55 am
image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 25 பேர் நேற்று மல்லாகம் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

எனினும், மேலும் 12 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி இலங்கை கடலெல்லையை தாண்டியபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்தது. 

நேற்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் அனைவரையும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை பெப்ரவரி 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இவர்களை ஏப்ரல் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்கள் விடுதலை – 12 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 25 பேர் நேற்று மல்லாகம் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், மேலும் 12 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி இலங்கை கடலெல்லையை தாண்டியபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் அனைவரையும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.இதேவேளை பெப்ரவரி 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவர்களை ஏப்ரல் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement