• Apr 23 2026

முல்லைத்தீவு நாயாறு பகுதி மக்களுக்கு 24 மணிநேர படகுசேவை!

Ziya / Dec 8th 2025, 3:26 pm
image

முல்லைத்தீவு நாயாறு பாலம் சேதமடைந்த நிலையில் குறித்த  பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக  பயணம்  செல்லும் வகையில், இலங்கை கடற்படையின் ஆதரவுடன் ஆறு படகுகள் தற்போது முழு நேர சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


ஆறு படகுகளிலும் இரண்டு பயிற்சி பெற்ற உயிர்காக்கும் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


அத்துடன் பயணிகளுக்காக உயிர்க்காப்பு ஜாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.


தகவல் பரிமாற்றத்திற்காக தமிழ் பேசும் கடற்படை அதிகாரி மற்றும் கடற்படை மகளிர் அதிகாரிகளும் சேவையில் உள்ளனர்.


அவசர தேவைகளுக்காக படகு சேவை 24 மணிநேரமும் செயல்படும் அதாவது இரவு 7.00 மணிக்குப் பின்னரும், ஒரு சிறப்பு குழு  அவசர சேவைக்காக தொடர்ந்து பணியில்  ஈடுபட்டுள்ளனர்.


அவசரமாக தொடர்புகளை  மேற்கொள்ள  072 337 2886 என்ற எண்ணிற்கு அழைத்தால், தமிழ் பேசும் அதிகாரி பதிலளித்து  அவசர நிலையில் படகு சேவையை ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.


நோயாளிகளை அல்லது பிற அவசியமான இரவு நேர போக்குவரத்திற்காக 0705229463 என்ற தொலைபேசி இலக்கத்தையும்  தொடர்புகொள்ளமுடியும்.


பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் கருதி அதிகாரப்பூர்வ கடற்படை போக்குவரத்து சேவையை பயன்படுத்தும்படி முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பிரிவு மாவட்ட செயலகம் சார்பாக  மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

































முல்லைத்தீவு நாயாறு பகுதி மக்களுக்கு 24 மணிநேர படகுசேவை முல்லைத்தீவு நாயாறு பாலம் சேதமடைந்த நிலையில் குறித்த  பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக  பயணம்  செல்லும் வகையில், இலங்கை கடற்படையின் ஆதரவுடன் ஆறு படகுகள் தற்போது முழு நேர சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.ஆறு படகுகளிலும் இரண்டு பயிற்சி பெற்ற உயிர்காக்கும் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.அத்துடன் பயணிகளுக்காக உயிர்க்காப்பு ஜாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.தகவல் பரிமாற்றத்திற்காக தமிழ் பேசும் கடற்படை அதிகாரி மற்றும் கடற்படை மகளிர் அதிகாரிகளும் சேவையில் உள்ளனர்.அவசர தேவைகளுக்காக படகு சேவை 24 மணிநேரமும் செயல்படும் அதாவது இரவு 7.00 மணிக்குப் பின்னரும், ஒரு சிறப்பு குழு  அவசர சேவைக்காக தொடர்ந்து பணியில்  ஈடுபட்டுள்ளனர்.அவசரமாக தொடர்புகளை  மேற்கொள்ள  072 337 2886 என்ற எண்ணிற்கு அழைத்தால், தமிழ் பேசும் அதிகாரி பதிலளித்து  அவசர நிலையில் படகு சேவையை ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.நோயாளிகளை அல்லது பிற அவசியமான இரவு நேர போக்குவரத்திற்காக 0705229463 என்ற தொலைபேசி இலக்கத்தையும்  தொடர்புகொள்ளமுடியும்.பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் கருதி அதிகாரப்பூர்வ கடற்படை போக்குவரத்து சேவையை பயன்படுத்தும்படி முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பிரிவு மாவட்ட செயலகம் சார்பாக  மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement