• May 21 2025

மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - 17 பேர் பணியிடைநிறுத்தம்!

Chithra / Jan 19th 2024, 10:28 am
image

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் 17 பணியாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மின்சார சபையின் காசாளர் கருமபீடங்களில் பணியாற்றியவர்களே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராக, அந்த காரியாலய வளாகத்தில் இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் அண்மையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.

இதன்படி, மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறும் வகையில் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - 17 பேர் பணியிடைநிறுத்தம் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் 17 பணியாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.மின்சார சபையின் காசாளர் கருமபீடங்களில் பணியாற்றியவர்களே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராக, அந்த காரியாலய வளாகத்தில் இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் அண்மையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.இதன்படி, மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறும் வகையில் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now