• May 05 2025

3 மாதங்களில் 1,250 முறைப்பாடுகள் - பொலிஸ் அதிகாரிகள் உட்பட 20 பேர் கைது

Chithra / May 5th 2025, 8:48 am
image


இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. 

ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை 1,267 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 24 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும், அவர்களில் ஒரு அதிபர், தொழில் அமைச்சின் அதிகாரி, ஒரு கள அதிகாரி மற்றும் ஒரு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. 

இதற்கு மேலதிகமாக பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், நீதி அமைச்சில் பணியாற்றும் ஊழியர், இறைவரித் திணைக்கள மதிப்பீட்டு அதிகாரி ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த வருடத்தில் மாத்திரம் 24 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் 21 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

3 மாதங்களில் 1,250 முறைப்பாடுகள் - பொலிஸ் அதிகாரிகள் உட்பட 20 பேர் கைது இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை 1,267 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 24 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும், அவர்களில் ஒரு அதிபர், தொழில் அமைச்சின் அதிகாரி, ஒரு கள அதிகாரி மற்றும் ஒரு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. இதற்கு மேலதிகமாக பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், நீதி அமைச்சில் பணியாற்றும் ஊழியர், இறைவரித் திணைக்கள மதிப்பீட்டு அதிகாரி ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் மாத்திரம் 24 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் 21 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement