• May 03 2026

ராஜகிரியவில் 120 வெளிநாட்டவர்கள் கைது - சட்டவிரோத நிதி மோசடி அம்பலம்

Chithra / May 3rd 2026, 2:24 pm
image

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்தப் பிரிவினரிடையே சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர்களிடமிருந்து  10 கோடி ருபாய்க்கும் அதிக பெறுமதியான  கணினிகள் மற்றும் கைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


மெத வெலிக்கடை வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, இவர்கள் இந்த மோசடி வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைது நடவடிக்கையின் போது இவர்களில் ஒரு குழுவினர் தப்பியோடியுள்ளனர். 

அவர்களைக் கைது செய்வதற்காக வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ராஜகிரியவில் 120 வெளிநாட்டவர்கள் கைது - சட்டவிரோத நிதி மோசடி அம்பலம் ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தப் பிரிவினரிடையே சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்களிடமிருந்து  10 கோடி ருபாய்க்கும் அதிக பெறுமதியான  கணினிகள் மற்றும் கைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.மெத வெலிக்கடை வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, இவர்கள் இந்த மோசடி வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது நடவடிக்கையின் போது இவர்களில் ஒரு குழுவினர் தப்பியோடியுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்காக வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement