• May 28 2026

நில அதிர்வில் சிக்கி 11 பேர் காயம்; இடிந்து வீழ்ந்த வீடுகள்! வெளியேறிய சுமார் 7,800 பேர்

Chithra / Sep 29th 2025, 8:33 am
image


சீனாவின் கன்சு  மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி 11 பேர் காயமடைந்ததுடன் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 

சீனாவின் கன்சு மாகாணத்தின் லாங்சி மாவட்டத்தில் நேற்று அதிகாலை, 5.6 மெக்னிடியூட் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

இதில், 17 வீடுகள் இடிந்து வீழ்ந்தன. 3,500க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

லாங்சி மற்றும் ஜாங்சியன் மாவட்டங்களில் சுமார் 7,800 பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். 

இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நில அதிர்வில் சிக்கி 11 பேர் காயம்; இடிந்து வீழ்ந்த வீடுகள் வெளியேறிய சுமார் 7,800 பேர் சீனாவின் கன்சு  மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி 11 பேர் காயமடைந்ததுடன் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. சீனாவின் கன்சு மாகாணத்தின் லாங்சி மாவட்டத்தில் நேற்று அதிகாலை, 5.6 மெக்னிடியூட் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதில், 17 வீடுகள் இடிந்து வீழ்ந்தன. 3,500க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லாங்சி மற்றும் ஜாங்சியன் மாவட்டங்களில் சுமார் 7,800 பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement