• May 17 2024

போதைப்பொருட்களுடன் கைதான 10 பேர் - தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

Chithra / Apr 17th 2024, 3:06 pm
image

Advertisement

 

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் 380 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைதான 10 பேரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 83 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 179 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், போதைப்பொருட்களுடன் கைதான சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களுடன் கைதான 10 பேர் - தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி  இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் 380 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைதான 10 பேரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.கடந்த 12 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 83 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 179 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.இந்த நிலையில், போதைப்பொருட்களுடன் கைதான சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement