• Apr 14 2026

07 முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் வெலிசர புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றம்!

Chithra / Apr 12th 2026, 8:59 am
image

பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஏழு பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வெலிசர புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.


நேற்று (11) குறித்த கைதிகள் வெலிசர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.


இவ்வாறு இடமாற்றப்பட்டவர்களில் வெலே சுதா, தெமட்டகொட சமிந்த, லொகு பெட்டி, மிதிகம ருவன், பெக்கோ சமன், ஆர்மி சம்பத் மற்றும் மன்னா ரமேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகள் உள்ளடங்குகின்றனர்.


பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்தவாறு இவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை வழிநடத்தியதாக கிடைத்த தகவல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலையானது விசேட பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த சிறைச்சாலையின் முதலாவது கைதிகள் குழுவாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

07 முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் வெலிசர புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றம் பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஏழு பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வெலிசர புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.நேற்று (11) குறித்த கைதிகள் வெலிசர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.இவ்வாறு இடமாற்றப்பட்டவர்களில் வெலே சுதா, தெமட்டகொட சமிந்த, லொகு பெட்டி, மிதிகம ருவன், பெக்கோ சமன், ஆர்மி சம்பத் மற்றும் மன்னா ரமேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகள் உள்ளடங்குகின்றனர்.பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்தவாறு இவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை வழிநடத்தியதாக கிடைத்த தகவல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலையானது விசேட பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த சிறைச்சாலையின் முதலாவது கைதிகள் குழுவாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement