• Mar 11 2026

கிரிக்கெட் மைதானத்தில் வேலையை காட்டிய தேனீக்கள் -பரிதாபமாக உயிரிழந்த நடுவர்!

Ziya / Feb 21st 2026, 11:42 am
image

https://www.facebook.com/share/v/1KCAc2miEF/

இந்தியாவில் விளையாட்டு மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் நடுவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் சுக்லகஞ்ச் பகுதியில் உள்ள ராகுல் சப்ரு மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. 

கிரிக்கெட்  போட்டியின் போது  65 வயதுடைய கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். 

அப்போது, தேனீக்கள் கூட்டம் திடீரென மைதானத்தில் நுழைந்து வீரர்களையும் நடுவர்களையும் தாக்கியது.

தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர். 

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணிக் குப்தா மைதானத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார். 

அவரை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் அதன்பின், மேலதீக  சிகிச்சைக்காக கான்பூர் லாலா லஜ்பத் ராய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்தச் சம்பவத்தை உறுதி செய்த கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர், வீரர்களும் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார். 

மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் அம்பயர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் மைதானத்தில் வேலையை காட்டிய தேனீக்கள் -பரிதாபமாக உயிரிழந்த நடுவர் https://www.facebook.com/share/v/1KCAc2miEF/இந்தியாவில் விளையாட்டு மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் நடுவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் சுக்லகஞ்ச் பகுதியில் உள்ள ராகுல் சப்ரு மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. கிரிக்கெட்  போட்டியின் போது  65 வயதுடைய கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, தேனீக்கள் கூட்டம் திடீரென மைதானத்தில் நுழைந்து வீரர்களையும் நடுவர்களையும் தாக்கியது.தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணிக் குப்தா மைதானத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் அதன்பின், மேலதீக  சிகிச்சைக்காக கான்பூர் லாலா லஜ்பத் ராய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தை உறுதி செய்த கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர், வீரர்களும் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார். மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் அம்பயர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement